ஒவ்வொரு மாணவரும் தனித்துவமானவர்கள். அவர்களின் தனித்திறமைகளை வளர்த்துப் பாதுகாத்து கல்விச் சிறப்பை உருவாக்குகிறோம். 2026–2027 கல்வியாண்டிற்கான LKG முதல் V வகுப்பு வரை சேர்க்கைகள் தொடங்கியுள்ளன.
எங்களைப் பற்றி
நேரு வித்தியாசாலை ஆரம்பப்பள்ளி 1948 ஆம் ஆண்டு திரு. இஸ்ரேல் உபாத்தியாயர் அவர்களின் மேற்பார்வையில், அவர்களது தவப்புதல்வி திருமதி வி.ஆர். பேசிங்கர் அவர்களால் “நேரு ஆரம்பப் பாடசாலை” என்ற பெயரில் நிறுவப்பட்டது.
125 மாணவர்களையும் 4 ஆசிரியர்களையும் கொண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளி, மறைந்த மாபெரும் தலைவர் திரு. காமராஜர் அவர்களின் கல்வித் தொண்டின் பிரதிபலிப்பாக, 1954 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் நாள் “நேரு வித்தியாசாலை” என பெயரிடப்பட்டது.
✔ 75+ ஆண்டுகள் அனுபவம்
✔ திறமையான ஆசிரியர்கள்
✔ சிறந்த கல்வி சூழல்
✔ முழுமையான மாணவர் வளர்ச்சி
1948 முதல் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கி,
ஒழுக்கம், அறிவு மற்றும் நல்ல பண்புகளை வளர்க்கும்
சிறந்த அரசு உதவிப் பள்ளியாக எங்கள் நிறுவனம் திகழ்கிறது.
— Headmaster
கல்விச் சேவைகள்..
மாணவர்களின் முழுமையான அறிவு மற்றும் திறன் வளர்ச்சிக்கான பல்வேறு கல்வி சேவைகள் வழங்கப்படுகின்றன.

நன்னெறிக் கல்வி
ஒழுக்கம், பண்பு மற்றும் நல்ல நடத்தை வளர்க்கும் நன்னெறிக் கல்வி வழங்கப்படுகிறது.

தளிர்த்திறன் கல்வி
மாணவர்களின் திறமைகள் மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்கும் திறன் வளர்ச்சி கல்வி வழங்கப்படுகிறது.

பொது அறிவு வகுப்புகள்
மாணவர்களின் பொது அறிவு மற்றும் சிந்தனைத் திறனை வளர்க்க சிறப்பு பொது அறிவு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

Spoken English
ஆங்கிலப் பேச்சுத் திறனை வளர்க்க நடைமுறை அடிப்படையிலான Spoken English பயிற்சி வழங்கப்படுகிறது.
தொழில்நுட்ப வழிக் கற்பித்தல்
தொழில்நுட்ப கருவிகள் மூலம் பாடங்களை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் கற்பித்தல் நடைபெறுகிறது.

சிறப்பு பயிற்சி வகுப்புகள்
மாணவர்களின் முன்னேற்றத்திற்காக கூடுதல் சிறப்பு பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.
பள்ளி செயல்பாடுகள்
மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்த மற்றும் முழுமையான வளர்ச்சியை அடைய பல்வேறு இணைச் செயல்பாடுகள் பள்ளியில் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.
புல்-புல் இயக்கம்
திருக்குறள் தேர்வு
அறிவியல் கண்காட்சி
✔ விளையாட்டு போட்டிகள் ✔ கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் ✔ பெற்றோர் – ஆசிரியர் கூட்டம்
